திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு அதிகாரிகளின் துணையோடு தனியார் குவாரி பணிகளுக்காக, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து மின்சாரம் திருடப்படுவது அம்பலமாகி உள்ளது. கண்ணன்கோட்டை பகுதியில் குவாரி அமைக்க பி.எஸ்.கே இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த குவாரிக்கு கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்தேக்க பராமரிப்பு அலுவலகத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டபோது அவர் கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.