கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி, தலைகீழாக தொங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிபி பள்ளி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி நடைபெறுகிறது. அப்போது, கான்கிரீட் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர், அருகில் இருந்த மின் கம்பி மீது உரசிய போது மின்சாரம் தாக்கியது.