தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மின்வாரிய உதவி பொறியாளரை வழிமறித்த மர்மகும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குவளைக்கன்னி பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராயகிரி மின்வினியோக உப கோட்டத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து வீடு திரும்பிய போது புளியங்குடி நவாச்சாலை பகுதியில் செல்வராஜை வழிமறித்த மர்மகும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். அவ்வழியாக வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், இரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வராஜை கொலை செய்ய முயன்றவர்கள் யார்? என்ன காரணம்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.