திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் தொட்டியை இறக்காமல் சென்ற டிப்பர் லாரி, உயர் அழுத்த மின்சார கம்பியியில் சிக்கியது. உடனடியாக சுதாரித்து கொண்ட ஓட்டுனர் துரிதமாக வாகனத்தை விட்டு கீழே இறங்கிய நிலையில், தகவலறிந்த ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.