சென்னையில் முதற்கட்டமாக ஒன்பது இடங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 15 நாட்களில் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி கோவில் பார்க்கிங் மற்றும் கடற்கரை பார்க்கிங், அம்பத்தூரில் மங்கல் ஏரி பார்க்கிங், தியாகராய நகரில் மாநகராட்சி மைதானம் பார்க்கிங் மற்றும் சோமசுந்தரம் மைதானம், ஆயிரம் விளக்கு பகுதியில் செம்மொழி பூங்கா, மெரினா கடற்கரை பார்க்கிங், அண்ணா நகரில் போகன் வில்லா பூங்கா, மயிலாப்பூரில் நாகேஸ்வரராவ் பூங்கா ஆகிய இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.