திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மன்னார்குடி சாந்தி தியேட்டர் எதிரே செல்போன் கடை நடத்தி வரும் தங்கமணி என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக கோமாக்கி நிறுவன இ-பைக்கை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் கடை வாசலில் நின்ற இ-பைக்கை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமானது.