மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர் வீட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை, சார்ஜ் செய்த போது வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மீன்பிடி படகுக்கு பொருத்தப்படும் புதிய அதிவேக எஞ்சின், ஜிபிஎஸ் கருவிகள், ஹைட்ராலிக் கருவி, பழுது பார்க்க வந்திருந்த படகு எஞ்சின், டிவி, ஏசி உள்ளிட்ட 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.