திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சாப்பாட்டிற்கு வழியின்றி தவிக்கும் முதியவர்கள் ரேஷன் கார்டும் , முதியோர் உதவி தொகையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சமங்கலம் காலணி பகுதியைச் சேர்ந்த சிவராஜ் - பாப்பம்மாள் தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்த நிலையில், இரண்டாவது மகன் கடந்த 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து மாட்டு கொட்டகையில் தனியே வாழ்ந்து வரும் தம்பதியர், ரேஷன் கார்டு இல்லாததால் இலவச அரிசியைக் கூட 10 ரூபாய் கொடுத்து வாங்குவதாகவும், முதியோர் உதவித் தொகையும் கிடைக்கவில்லை என்றும் கவலையுடன் தெரிவித்தனர்.