தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாறைப்பட்டி பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதலில் வேலுச்சாமி என்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.