நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை கடந்த 3 நாட்களில் 25 பைசா வரை உயர்ந்து முட்டை ஒன்று 5 ரூபாய் 05 காசுக்கு விற்பனை செய்யப்படுவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் மூலமாக நாளொன்றுக்கு 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த முட்டைகள் தமிழகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரிக்குக்கும், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் உற்பத்தி குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் முட்டை விலை உயர்ந்துள்ளதாக கூறும் பண்ணையாளர்கள் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினர்.சென்னையில் முட்டை ஒன்று 5 ரூபாய் 50 காசுகள் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடதக்கது.