அதிமுக பிரமுகர் கொலைக்கான காரணம் தெரிந்தும் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நிலத்தகராறில் அதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணனை கொலை செய்தவரே குற்றத்தை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டு கைதாகிய நிலையில், உள்ளாட்சி தேர்தலின் போது நடந்த தகராறை வைத்து அதை திமுகவுடன் முடிச்சு போடும் ஈனச்செயலை எடப்பாடி பழனிசாமி செய்ய முயற்சிப்பதாக சாடியுள்ளார். "சட்டம் ஒழுங்கு சரியில்லை" என்ற அவதூறுக்கு ஆதாரம் தேடி தோற்றுப்போன பழனிசாமி இந்த சம்பவத்தை கையிலெடுத்துள்ளார் என்றும், இதிலும் அவருக்கு தோல்வியே கிடைக்கும் எனவும் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்இதையும் படியுங்கள் : 'ஒருநாள், ஒரு நொடி கூட அண்ணாவை விட்டுக் கொடுக்க மாட்டோம்'