ஸ்டாலின், உதயநிதி வந்த பிறகு திமுகவில் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து விட்டதால், வீடு வீடாகப் பிச்சை எடுக்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் கடுமையாக விமர்சனம் செய்தார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே காந்திஜி சாலையில் மக்களிடையே பேசினார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் திமுக ஆகிவிட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, வீடு வீடாக போய் உறுப்பினர்களை சேர்க்கும்போதே அந்த கட்சி வீக் என்பது உறுதியாகிவிட்டதாக கூறினார்.