மாநில உரிமைகளை அடகு வைத்தது போல், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்தார். சென்னை கொரட்டூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், அதிமுக மீண்டும் வெல்வது சிரமம் என்றும் பாஜக எனும் குழியில் அதிமுக மாட்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.