சென்னை திருவான்மியூரில் உள்ள டாஸ்மாக் முன்னாள் மேலாளர் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். டாஸ்மாக் நிறுவன முன்னாள் மேலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய டி.ஆர்.ஓவாகவும் இருந்து வரும் காளிதாஸ் வீட்டில் 4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.