ஜவ்வாது மலையில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில், விளைநிலங்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. எக்கூர், ஆண்டியூர், மகனூர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கின.