சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவியது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதற்கிடையே முன்னே செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனி படர்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.