சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது.