நீலகிரி மாவட்டம் குன்னூரில் டேன் டீ தோட்ட தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 10 சதவீத போனஸ் அறிவித்திருந்த நிலையில் 20 சதவீத போனஸ் வழங்க கோரி மாவட்ட AITUC தொழிற்சங்க பொதுச் செயலாளர் போஜராஜ் தலைமையில் டேன் டீ அலுவலகம் முன்பு குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் பணியாற்றும் டேன் டீ தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.