ஆன்லைன் வர்த்தகத்தால் 27 சதவீதம் வியாபாரத்தை வணிகர்கள் இழந்து விட்டதாக தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.தஞ்சாவூரில் நடைபெற்ற மாநகர வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசியவர், இந்தியா முழுவதும் 10 கோடி வியாபாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிப்படைவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக கூறினார்.