ஈரோடு மாவட்டம் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை ஒட்டியுள்ள சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் ஆலைகள் கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஓடையில் விடுவதை தடுக்க வலியுறுத்தி தமிழக மக்கள் நல கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரசாயன கழிவு நீரால் புற்று நோய், தோல் நோய்கள் வருவதாக கூறி போராட்டம் நடந்த நிலையில், சாய ஆலைகளை நடத்தி வருபவர்கள் மிகப்பெரிய முதலாளிகள் எனவும், இந்த போராட்டம் எல்லாம் அவர்களுக்கு சாதாரண விஷயம் என்றும் துப்புரவு பணியாளர்கள் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : நிலம் அளவீடு செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக புகார்... லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்