ஈரோட்டில் வருகிற 18ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் TVK-வின் புதிய தூண்ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே, விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு, காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல் துறையும் தற்போது அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதியதாக இணைந்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் சந்திப்பு இடத்தில் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இவருடன் TVK நிர்வாகிகளும் உடன் இருந்து மக்கள் சந்திப்பு ஏற்பாடுகளை தயார் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.