மைசூருக்கு அடுத்தபடியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் குலசை தசரா திருவிழா இன்று தொடங்க உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று முதல் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.