கன்னியாகுமரி பத்துகாணி காளிமலை பத்ரகாளியம்மன் கோவிலில், துர்காஷ்டமி திருவிழாவையொட்டி பகவதி அம்மன் கோவிலிலிருந்து சமுத்திர கிரி ரதயாத்திரை தொடங்கியது. ரத்யாத்திரையை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்க பெண்கள் இருமுடி கட்டியும் ஆண்கள் தீர்த்த குடம் சுமந்தும் ஊர்வலமாக சென்றனர். குமரி முனையில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரை விவேகானந்தபுரம், அச்சங்குளம், பொத்தையடி, சுசீந்திரம் கோட்டார், மீனாட்சிபுரம், மணியடிச்சான் கோயில், ஒழுகினசேரி வழியாக பத்துகாணி காளிமலையை சென்றடைய உள்ளது. முன்னதாக குமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீர் குடங்களில் நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது.