நாகையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பெண் காவலர் பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகியுள்ளது. தோனித்துறை ரோடு பகுதியில் மேம்பால விரிவாக்க பணிகளுக்காக நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது வீட்டின் உரிமையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், போலீசார் வலுக்கட்டாயமாக அனைவரையும் வெளியேற்றி கைது செய்தனர்.