மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியதையடுத்து தந்தை, மகன் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திருமண நிகழ்விற்கு இருவரும் இணைந்து சென்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சென்னையை அடுத்த மாங்காட்டில் நடைபெற்ற கட்சி நிர்வாகி திருமணத்திற்கு சென்ற இருவரும் மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.