தூத்துக்குடி மாநகராட்சியில், மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் காலி இடங்களில் மழைநீர் தேங்கியது. P&T காலனி, கதிர்வேல் நகர், நிக்லேஷ் நகர், பாக்கியலட்சுமி நகர் பகுதிகளில் தேங்கிய மழை நீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கி நிற்கும் நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.