திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற ஜல்லி கற்களை கொட்டியதுடன் பணியை நிறுத்தியதால், 6 மாதங்களாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். மேல்பள்ளிப்பட்டு மற்றும் மேல்செங்கம் கிராமங்களை இணைக்கும் சுமார் இரண்டு மீட்டர் தூரத்திற்கு சுமார் 1.80 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்க முடிவு செய்து பழைய சாலை அகற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பணி முடியாததை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறிய கிராம மக்கள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து சாலையை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : இடத்தை கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளரின் கணவர்... புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை?