புரட்டாசி மாதத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க, அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டாததால் வழக்கத்தை காட்டிலும் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் அசைவ உணர்வுகளை தவிர்த்து விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இதன் காரணமாக சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வஞ்சிரம் கிலோ 850 ரூபாய்க்கும் , சங்கரா 400 ரூபாய்க்கும் , வவ்வால் 450 ரூபாய்க்கும் கனவாய் 300 ரூபாய்க்கும் , நண்டு 300 ரூபாய் என அனைத்து மீன்களின் விலையும் குறைந்திருந்தது.