ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால், இரவு நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவரச சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், போதிய மருத்தவர்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.