திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் பேருந்து வசதி குறைவாக இருப்பதனால் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு செல்லும் நிலை இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். செய்யாறில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணாக்கர்கள் சென்று வரும் நிலையில், பள்ளி, கல்லூரி இயங்கும் நேரங்களை கணக்கில் கொண்டு பேருந்து சேவையை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.