புதுக்கோட்டை நகர் பகுதியில் இரவு நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால், பெரியார் நகர் பகுதியில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. புதுக்கோட்டை நகர் பகுதிகளான முள்ளூர், பெருங்களூர், மச்சுவாடி, இச்சடி பகுதிகளில், சனிக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், பெரியார் நகரில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் கடும் அவதிக்கு ஆளான அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.