திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு ஏரிக்கரை பகுதியில் உபரிநீர் வெளியேறி வருவதால் நாள்தோறும் பொதுமக்கள் அதனை கடைந்து செல்ல கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் ஒரு தரைப்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.