மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கின் போது, எறும்பு தின்னி அடித்து வரப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில், அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிக மழை காரணமாக, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த அதிக மழை காரணமாக திடீரென குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க திடீரென தடை விதிக்கப்பட்டது மேலும், இந்த வெள்ள நீரில் எறும்பு தின்னி ஒன்றும் அடித்து வரப்பட்டுள்ளது.இதையும் பாருங்கள்; https://x.com/i/status/1979221970001580338