சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பெய்த கனமழை காரணமாக சாலையோர வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு பூ, பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை சாலையோரம் வைத்திருந்த நிலையில், கனமழையால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்த நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.