திருச்சி அருகே மாம்பழச்சாலை பகுதியில் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், மேய்ச்சலுக்கு சென்ற 3 பசு மாடுகள், கரை திரும்ப முடியாமல் தவித்தன. மணல் திட்டில் சிக்கி கொண்ட மாடுகளை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.