திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கனமழையால் மஞ்சளாற்று ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. காந்தி நகர், முத்துராமலிங்கத் தேவர் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மின் தடையின் போது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் செய்வதறியாமல் தவித்த மக்கள், அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். வெள்ளத்தால் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்களும் சேதமடைந்தன.