திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புறவழிச் சாலையில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, வளையாம்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மீண்டும் பெய்த கனமழையால் புறவழிச்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலையில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கும் நீர்வரத்து கால்வாய்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.