ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில், ஆந்திர மாநில கலவகுண்டா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணையில் இருந்து முதற்கட்டமாக 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மிக கனமழையினால் இந்த அளவானது மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொன்னையாற்றின் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் யாரும் வெள்ள நீர் செல்லும் பொன்னையாற்றில் இறங்கவோ, ஆற்றினை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம், கால்நடைகளை ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.