வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக திருவள்ளூர் அருகே குடியிருப்பு பகுதியில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காக்களூர் பூந்தோட்டம் மற்றும் சாய் நகர் பகுதியில் உள்ள தாழ்வான குடியிருப்புகளில் தேங்கியுள்ள கழிவு நீருடன் மழைநீர் கலந்ததால், பாசிபடர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால், கடும் சிரமத்திற்கும் ஆளாகுவதாகவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.