திருவாரூரில் பெய்த கனமழையால் ரயில்வே பாலத்தின் கீழ் வெள்ளம் தேங்கிய நிலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம், வாழவாய்க்கால், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.