சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து வந்த இரண்டு விமானங்களும் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்த நிலையில் பத்திரமாக தரையிறங்கின. சென்னை மற்றும் பெங்களூருவிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தன. அப்போது, டானா புயல் காரணமாக அதிக காற்று வீசியதாலும், மழை காரணமாகவும் தரையிறங்க முடியாமல் தேனி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் வானில் வட்டமடித்ததையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பின் தரையிறங்கின.