சென்னை அடுத்த ஆவடி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற தம்பதி, 2018 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு மீதான விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார்.