ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு வாலிபர்கள் ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள சித்தோடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்ற ஒரு பைக்கை நிறுத்த கூறியுள்ளனர். பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்து மற்றொரு நபர் ஹெல்மெட் அணியாமல் இருந்த நிலையில், போலீஸ் நிற்கச்சொல்லியும் கேட்காமல் பைக் அதிக வேகத்தில் சென்றுள்ளது.. இதனை தொடர்ந்து பணியில் இருந்த போலீஸ் இருவரையும் பின்தொடர்ந்து மடக்கி பிடித்த நிலையில் அவர்கள் இருவரும் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டனர். இளைஞர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.