வேலூர் சலவன்பேட்டை பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்முகம் என்பவருடைய மூத்த மகன் மோகன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நிலையில், தட்டி கேட்ட தம்பி பாஸ்கரனை கத்தியால் குத்த முயன்றார். அப்போது அவரது கழுத்தை நெறித்து தம்பி கொலை செய்துள்ளார்.