கொடைக்கானல் ஏரிசாலை பகுதியில் நிறுத்தியிருந்த பைக்கை திருடி சென்ற மதுபோதை இளைஞர், அதனை தள்ளி செல்ல முடியாமல், 100 மீட்டர் தூரத்திலேயே நிறுத்திவிட்டு அமர்ந்த நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். நகராட்சி அலுவலகம் அருகே ஜோஸ்வா என்பவர் நிறுத்தி வைத்த பைக் மாயமானதையடுத்து, அவர் நகராட்சி அலுவலக சிசிடிவி பதிவை ஆய்வு செய்துள்ளார். சிவப்பு நிற சட்டை அணிந்த இளைஞர் ஒருவர், பைக் அருகில் நின்று, வருவோர் போவோரிடம் சாவி தொலைந்து விட்டது, யாராவது கொடுங்கள் என கேட்டது தெரிய வந்ததையடுத்து பைக் மீட்கப்பட்டது.