திருவள்ளூர் மாவட்டம் ஜங்காலப்பள்ளி கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்ற வந்த தனியார் பள்ளி வேனின் ஓட்டுநர் மதுபோதையில் உளறியதை கண்டு அதிர்ந்த பெற்றோர் வேனை தடுத்து நிறுத்தினர். கோரகுப்பம் பகுதியில் செயல்படும் KALAM VIDYASANSKAR PATSHALA என்ற தனியார் பள்ளியின் ஓட்டுநர் ரவி என்பவர் காலையிலேயே மது அருந்திவிட்டு மாணவர்களை ஏற்ற வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் வேனை தடுத்து நிறுத்தி பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பள்ளியிலிருந்து வேறு ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.இதையும் படியுங்கள் : பள்ளி மாணவியிடம் செல்போன் எண் கேட்டு ஆபாச பேச்சு