செங்கல்பட்டு அருகே மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர், கார் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.மேலமையூர் திடீர் நகரை சேர்ந்த உமாசந்தர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் காரில் சென்றபோது, எதிர்திசையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த திருமணியை சேர்ந்த தீபக், கார் மீது நேருக்கு நேராக மோதினார். இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த தீபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார் மீது டூவீலர் மோதிய சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.