விபத்தில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை, காயமடைந்தவருடன் வந்தவர்கள் மதுபோதையில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிழக்கு கடற்கரைச் சாலை கூவத்தூர் சீக்கின்னாங்குப்பம் சாலையில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் செந்தமிழன் என்பவர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். படுகாயம் அடைந்த ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த மற்றவர்கள் செந்தமிழனை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தாக்கிய நபர்களில் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.