தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் அருகே போதையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி சென்றவரை தட்டி கேட்ட இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்டார். பனிமய மாதா பேராலயம் பகுதியைச் சேர்ந்த இன்ஃபெண்ட் ரோசஸ், பேராலயம் பின்புறம் நின்றிருந்த போது லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த ராஜா பைக்கை வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட இன்ஃபெண்ட் ரோசஸ் தெருவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருப்பதால் மெதுவாக செலுத்துமாறு கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட பின்னர் அங்கிருந்து சென்ற ராஜா 20க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து இன்ஃபெண்ட் ரோசஸை தாக்கியதாக கூறப்படுகிறது..இதையும் படியுங்கள் : கடலூரில் வேப்பூர் அருகே கோயில் கோபுரம் இடிந்தது