சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருளை வைத்திருந்த சென்னையை சேர்ந்த இளைஞரை திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். இந்தியா முழுவதும் போதைப்பொருள் சப்ளை செய்து கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட செனகல் நாட்டை சேர்ந்த பெண்டே என்பவர் கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையை சேர்ந்த மதின் அகமது என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 55 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 40 எம்டிஎம்ஏ போதைப்பொருள் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.